உள்ளூர்
அக்கரைப்பற்றில் 9 மாத சிசுவுக்கு கொரோனா

அக்கரைப்பற்றில் 9 மாத சிசுவொன்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இந்த 9 மாத சிசுவும் 75 வயது வயோதிபரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கல்முனைப் பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
சிசு, சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சிசுவின் பெற்றொர்களுக்கு வைரஸ் தொற்றில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேனை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது.