இதை அடையாமல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவே மாட்டேன்.’ – வெறித்தனமாக பேசிய ஷகீப் அல் ஹஸன் (தன்னை வளர்த்த அணிக்கு கொடுக்கும் மரியாதை இதுதான்)

பங்களாதேஷ் கிரிக்கெட்….
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய சகலதுறை வீரர்களில் ஒருவரான ஷகீப் அல் ஹஸன் அந்த அணியின் மிகப்பெரிய முதுகெலும்பாக காணப்படுகிறார். அவர் இல்லாமல் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதும் ஒரு கடினமான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறான நிலையில் தான் சகிப் அல் ஹசன் கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி இருந்தார்.
அதாவது சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை மறைத்த குற்றச்சாட்டின் பெயரில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அவர் ஒரு வருட கிரிக்கெட் போட்டி தடையை எதிர் கொண்டு இருந்தார். இவ்வாறான நிலையில் தான் அண்மையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற தொடரில் பங்களாதேஷ் அணிக்கு திரும்பினார்.
தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷகீப் அல் ஹஸன் களம் இறங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றார். 34 வயதாகும் ஷகீப் அல் ஹஸனிடம் ஓய்வு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருந்தார்.
அவர் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர் வரை நான் கண்டிப்பாக விளையாடுவேன். அந்த தொடரை பங்களாதேஷ் அணி கைபற்றவில்லை என்றால் மீண்டும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் நிச்சயம் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.