விளையாட்டு

இலங்கை வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தட்டி தூக்கிய முக்கிய ஐபிஎல் அணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் 2021 தொடருக்கான விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் கொரோனா வழக்குகள் அதிகரித்ததால் ஐபிஎல் 2021 தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இறுதிப் போட்டி அக்டோபர் 15ம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்கா, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா மற்றும் சிங்கப்பூர் அதிரடி மன்னன் டிம் டேவிட் ஆகியோரை மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் 2021 தொடருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக ஹசரங்காவும், டேனியல் சாம்ஸ்-க்கு பதிலாக சமீராவும், Finn Allen-க்கு பதிலாக டிம் டேவிட்-ம் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை-இந்தியா டி-20 தொடரில், ஹசரங்கா 3 போட்டிகளில் 5.58 என்ற விகிதத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2021ல் RCB அணிக்காக விளையாடவிருக்கும் வெளிநாட்டு வீரர்களின் விபரம்: ஏபி டெவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், ஹசரங்கா, சமீரா, டிம் டேவிட், டான் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், தனிப்பட்ட காரணங்களுக்காக RCB தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து Simon Katich விலகிய நிலையில், Mike Hesson தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button