உள்ளூர்

மகளை ஏமாற்றியவரை பித்தளைப் பாத்திரங்களால் அடித்து கொன்ற தந்தை – பதுளையில் சம்பவம்

பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், உயிரிழந்த 25 வயதுடைய நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

முதல் திருமணம் செய்த மனைவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இரண்டாவது மனைவியின் தந்தை, குறித்த நபரையும் மகளையும் வேனில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அங்கு ஏ ற்ப ட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டாவது மனைவியின் தந்தை, தாய் மற்றும் அவரது இளைய சகோதரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button