ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

சம்பூர்..
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தவகுமார் ரதுசன் (18 ) ஏன்பவரே உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் தனது நண்பர்களோடு இறால் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது. சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று பார்வையிட்டார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று முன்தினம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்திடீர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டார் .