உள்ளூர்

இலங்கையை சேர்ந்த இந்த அழகிய தேவதைக்கு இப்படி ஒரு நிலையா? இனி யாரும் இதை செய்யாதீர்கள்

இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது திறமையால் ஒரே தினத்தில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வை அழகுப்படுத்திய சிறுமி தொடர்பில் இலங்கை மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த சசாதி என்ற சிறுமி கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹேர நிகழ்வில் மயில் வேடமிட்டு நடனமாடினார்.அவரின் நடன காணொளி வைரலாக பரவி வருகிறது.

இந்த அழகிய தேவதைக்கு இப்படி ஒரு பிரச்சினையா?
பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேட்காத இந்த சிறுமியின் நடனம் உள்நாட்டு மக்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இம்முறை புலமைபரிசீல் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள சசாதியின் இயலாமை குறித்து பலரும் அனுதாபம் வெளியிட்டு வருகின்றமைக்கு அவரது பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இனி யாரும் இதை செய்யாதீர்கள்எங்கள் மகளை யாரும் பாவமாக பார்க்க வேண்டாம். அவரது இயலாமையை அவமானப்படுத்த வேண்டாம்.

பேஸ்புக் யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் தங்கள் மகள் குறித்து காண்பதாகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button