எந்தவொரு அணியையும், குறைத்து மதிப்பிட கூடாது… இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்த பின் ரோஹித் ஷர்மா கூறும் விடயங்கள்.

எந்தவொரு அணியையும், குறைத்து மதிப்பிட கூடாது… இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்த பின் ரோஹித் ஷர்மா கூறும் விடயங்கள்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த இணைப்பாட்டமே, டுபாயில் இடம்பெற்ற போட்டியில் தமது அணி தோல்வியடைய காரணம் என இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண ‘சுப்பர் 4’ கிரிக்கெட் போட்டியின் பின்னர், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த வகையில் செயற்பட்டனர். விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களில் இலங்கை அணி 90 ஒட்டங்கள் பெற்றிருந்தது.நாம், போட்டியை எமது பக்கம் கொண்டுவர முயற்சித்தோம். இருந்தபோதிலும், விக்கெட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தது.
இலங்கை அணியின் டில்சான் மதுசங்க, சிறந்த பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்தினார்.எந்தவொரு அணியையும், குறைத்து மதிப்பிட கூடாது. அனைத்து அணிகளும், சகல போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும், இலங்கை அணியிடம் சிறந்த ஆட்டத்தை அவதானித்ததாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய அணியை 170 என்ற ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தும் பட்சத்தில், போட்டியை வெற்றிக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்த்ததாக இலங்கை அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.முதல் ஓவரில் நிதானமாக துடுப்பாடி, பின்னர் சந்தர்ப்பத்தை பொருத்து ஆடுமாறு எமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எமது வெற்றிக்கு குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் சிறந்த இணைப்பாட்டமே காரணமாகும். அத்தோடு டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.வேகமாக பந்துவீசக்கூடிய அவரிடம், அடுத்த வரும் போட்டிகளில் சிறந்த ஆட்டத்திறன் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.