கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே 22 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம்!!

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே தூங்கிய 22 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபத்தை சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி. இவரின் மகன் அபிஜித் (22). இவருக்கு 70000 டொலர்கள் சம்பளத்தில் சவுதி அரேபியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் வேலை கிடைத்துள்ளது.
அடுத்த மாதம் அந்த பணியில் அபிஜித் சேரவிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை இரவில் பார்த்த அபிஜித் அப்படியே தூங்கியிருக்கிறார்.
பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென நெஞ்சு வலியால் துடித்த அவர் இது குறித்து பெற்றோரிடம் கூறினார். பின்னர் குடும்பத்தார் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அபிஜித் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு பெரிதாக எந்தவொரு உடல்நலப்பிரச்சனைகளும் இல்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.