கடைசி வரை போராடிய தசுன் ஷனகா.. நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை

கடைசி வரை போராடிய தசுன் ஷனகா.. நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை
104 ஓட்டங்கள் விளாசிய நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை நவம்பர் 1ஆம் திகதி எதிர்கொள்கிறது
சிட்னியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம் விளாசியதன் மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.
NZ set a target of 168!
Let's do it Lions!👊#SLvNZ #RoaringForGlory #t20worldcup pic.twitter.com/WfLaP9lI88
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 29, 2022
இலங்கை அணி தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, ஹசரங்கா, லஹிரு குமார மற்றும் தனஞ்சய டி சில்வா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. போல்ட், சௌதீயின் மிரட்டலான பந்துவீச்சினால் இலங்கை அணி 8 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
Defeat in Sydney 💔
NZ won by 65 runs.#SLvNZ #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/30MDbqeutw
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 29, 2022