உலகம்
காணாமல் போன 5 வயது சிறுவன்..110 நாட்களுக்கு பின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

காணாமல் போன 5 வயது சிறுவன்..110 நாட்களுக்கு பின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..அமெரிக்காவில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் நான்கு மாதங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
பூங்காவில் காணாமல் போன சிறுவன்
ஜூவானோ முன்குயா என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் Sarg Hubbard பூங்காவிற்கு சென்றார். அங்கு தனது 5 வயது மகன் லூசியனை அவனது சகோதரனுடன் விளையாட விட்டார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பார்த்தபோது தனது மகன் லூசியன் காணாமல் போயிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜூவானோ குடும்பத்தினர் சில நாட்களாக அந்த பகுதியில் தீவிரமாக தேடினர்.