ஹெலிகாப்டர்கள் விபத்தில் பிரித்தானிய தம்பதி உயிரிழப்பு: அவுஸ்திரேலிய கடற்கரையில் சோகம்

ஹெலிகாப்டர்கள் விபத்தில் பிரித்தானிய தம்பதி உயிரிழப்பு: அவுஸ்திரேலிய கடற்கரையில் சோகம்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள தீம் பார்க் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்து இருந்த நிலையில், அதில் இரண்டு பேர் பிரித்தானியர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீம் பார்க் அருகே ஹெலிகாப்டர் விபத்து
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள “சீ வேர்ல்ட் தீம் பார்க்” அருகே இரண்டு ஹெலிகாப்டர் ஒன்றுடன் ஒன்று மோதி நடுவானில் விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.கோடை பள்ளி விடுமுறையை கழிப்பதற்காக பூங்காவில் பல்வேறு குடும்பங்கள் குழுமியிருந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது மற்றொரு ஹெலிகாப்டருடன் மோதியது, அதில் ஆறு பேர் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Australia: At least 4 killed in mid-air collision between two helicopters near Seaworld on Gold Coast.#GoldCoast #HelicopterCrash #halicopter #Crash #New #videos #news #Latest #Top pic.twitter.com/9dQHNHqStY
— Top Viral Videos (@ManojKu40226010) January 2, 2023
பிரித்தானிய தம்பதியினர் உயிரிழப்பு
இந்த ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு பேர் பிரித்தானியாவின் லிவர்பூலைச் சேர்ந்த டயான்(57) மற்றும் ரான் ஹியூஸ்(65) தம்பதியனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் என்றும், அவர்களது இழப்பை மிகுந்த மன வேதனையுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க முயற்சிப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த 40 வயதான விமானி மற்றும் 36 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
10 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 33 வயதுடைய பெண்ணும் ஒன்பது வயது சிறுவனும் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.