பஸ்களை இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் 12 பொதுமக்கள் பரிதாபமாக பலி… மேலும் பலர் காயம்!!!

பலர் காயம்!!!
அமெரிக்க இராணுவத்தின் உதவியின் மூலமாக சிரியாவில் தலைதூக்கியிருந்த ஜ.எஸ் பயங்கரவாதிகள் இல்லாது ஓரங்கட்ப்பட்டனர். இந்நிலையில் சிரியாவில் ஜ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடானது மீண்டும் தலை தூக்கியுள்ளது, அதாவது அவர்கள் அங்கு அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து பல்வேறு தாக்குதல்களினை தொடர்ச்சியாக மேற்கொன்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அதிகளவிலான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அங்குள்ள ஜோர் மாகாணத்தில் உள்ள எண்ணை வயலில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி முடிந்ததும் 03 பஸ்களில் வீடுநோக்கி பயணித்த போது அதனை வழிமறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டை வெடிக்கச் செய்தபோது 03 பஸ்களும் வெடித்துச் சிதறின இதன்போது ஈவிரக்கமற்ற ஜ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடும் நடாத்தியதில் சம்பவ இடத்தில் 12 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்து அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.