உள்ளூர்

யாழில் பச்சிளம் குழந்தையை நாய்கள் உண்ட கொடூரம் : பெண் ஒருவர் அதிரடியாக கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் சிசுவின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக கிடந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸாருக்கு திங்கட்கிழமை(02.01.2023) மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் , 34 வயதான பெண்ணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட மருதங்கேணிபொலிஸார் பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் குழந்தையை பிரசவித்த பெண்ணுக்கு திருமணமாகி, கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வசிக்கிறார். அத்துடன் அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ள நிலையில் தவறான தொடர்பின் மூலம் தற்போது குழந்தை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டு தினமான 1ஆம் திகதி குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்ததாக குறித்த பெண் பொலிசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து பருத்தித்துறை நீதிவான் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், குழந்தை பிரசவித்த பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button