உயர் தரப் பரீட்சைப் பெறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை நடைபெற்று 33 நாட்களில் வெளியிட முடிந்தது.
இந்த நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அதிகாரிகள், விடைத்தாள் மதிப்பீடு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் பத்து மாண மாணவியர் 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர் பல்கலைக்கழக கற்கைகளை தொடர்வதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் பெறுமதியான காலம் இவ்வாறு வீணாவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரமமாக பெறுபேறுகளை துரித கதியில் வெளியிட்டு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.