விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து தமிழக வீரரை நடராஜன் நீக்கம் ! சன்ரைசர்ஸ் அவசர முடிவு! … விவரம் இதோ

விவரம் இதோ…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து தமிழக வீரரை நடராஜன் நீக்கம் ! சன்ரைசர்ஸ் அவசர முடிவு! … விவரம் இதோ

நடப்பு ஐபிஎல் தொடரின் 9வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் இரு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை தான் விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மேக்ரோ ஜென்ஷன் நீக்கப்பட்டு ஆடம் மில்னே சேர்க்கப்பட்டார்.

சன்ரைஸ் அணியில் நான்கு மாற்றமாக சாகா,சபாஷ் நதீம்,ஹோல்டர்,நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டு விராட் சிங்,அபிஷேக் சர்மா,முஜிபூர் ரகுமான்,கலீல் அஹமது சேர்க்கப்பட்டனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அணியில் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இவர் கடந்த சீசனில் ஹைதராபாத்தில் அணிகள் மிக சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டு இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட்டார். மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் புவனேஸ்வர் குமாரை விட நடராஜன் சிறப்பாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹோல்டர் நீக்கப்பட்டதும் ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது.

இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் டாம் மூடியிடம் ஆட்டத்தின் நடுவே கேள்வி எழுப்பப்பட்டபோது , நடராஜன் நீக்கப்பட வில்லை என்றும் ஐபிஎல் நெடுந்தொடர் என்பதால் அவருக்கு சற்று ஓய்வு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் காணப்படுகிறது. அந்த வகையில் 14ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது இந்த வருடம் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்தியாவில் 6 மைதானங்களில் நடைபெற உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் அண்மையில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சரஸ் பெங்கள10ர் அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஓட்டங்களினால் பரிதாபமான முறையில் தோல்வி கண்டது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிபெறும் எதிர்பார்க்கப்பட்டாலும், இறுதி நேரத்தில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பல் காரணமாக அந்த அணி தோல்வியை தழுவியது.


இதனால் இனி அடுத்து வரும் போட்டிகளில் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் விஜய் சங்கருக்குப் பதிலாக கேதர் ஜாதவை களமிறக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. டேவிட் வோர்னரின் சிறப்பான ஆரம்பத்தை தொடர்வதற்கு ஒரு முறையான மிடில் ஆர்டர் ஐ ஹைதராபாத் அணி இந்த முறையும் தேடி வருகிறது.

விஜய் சங்கர், கடந்த சில தொடர்களாக மிகவும் மோ சமாக விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே ஹைதராபாத் அணி அதனுடைய இரண்டு போட்டிகளிலும் வெற்றியின் பக்கத்தில் சென்று தோல்வி அடைந்தது. இதன் காரணமாக விஜய் சங்கரை கைவிட்டுவிட்டு, இந்த ஆண்டு இடத்தில் எடுக்கப்பட்ட முன்னாள் சென்னை வீரர் கேதர் ஜாதவை இனி வரும் போட்டிகளில் ஆட வைக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் இரண்டு சிறப்பான அரைசதம் அ டித்து நல்ல பார்மில் உள்ளார். எனவே அவரை இனிவரும் ஆட்டங்களில் ஆட வைக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button