நீ விதைத்த விதையெல்லாம்…. நள்ளிரவில் ஆர்சிபி-யை தூங்க விடாமல் செய்த சிஎஸ்கே ! இப்போ புரியுதா யாரு வேஸ்ட்டுன்னு ? சென்னைனா எப்பவுமே கெத்துதான்

விளையாட்டு
2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 23 ஆவது லீக் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடினார். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துடுப்பாட்டத்தில் மனிஷ் பாண்டே 46 பந்துகளில் 61 ஓட்டங்களையும், அணித் தலைவர் டேவிட் வார்னர் 57 பெற்றுக் கொடுத்தனர்.
172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 173 ஓட்டங்களை பெற்று போட்டியில் இவ்வாறு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ருத்துராஜ் கைக்வாட் மற்றும் பாப் டு பிளசிஸ் ஆகியோரின் மிக சிறப்பான துடுப்பாட்டம் மூலம் சென்னை அணி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 129 ஓட்டங்கள் சேர்த்தது.
இவர்களின் இந்த ஆரம்ப இணைப்பாட்ட உதவியுடன் சென்னை அணி இவ்வாறு 18.4 ஓவர்களில் போட்டியில் வெற்றி இலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக 75 ஓட்டங்களை குவித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ருத்துராஜ் கைக்வாட் தெரிவானார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நேற்றைய போட்டிக்கு முன்னர் விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் காணப்பட்ட நிலையிலேயே சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.