விளையாட்டு

இந்த முடிவை வரவேற்கிறோம் | இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 இந்த நாட்டில் தொடரும்….! முழு விவரம் இதோ…!

இந்த முடிவை வரவேற்கிறோம் | இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 இந்த நாட்டில் தொடரும்….! முழு விவரம் இதோ…!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக வீரர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த மே 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மொத உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் சிலருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அனைத்து கொல்கத்தா வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அந்த போட்டியை மட்டும் ரத்து செய்தது பிசிசிஐ. ஆனால் அதன்பின்னர் அனைத்து அணிகளில் உள்ள எல்ல வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஐராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக அனைத்து போட்டிகளையும் ரத்து செய்தது பிசிசிஐ.

இப்பொழுது மீதமுள்ள போட்டிகளை எங்கு எப்பொழுது வைக்க முடியும் என்று பிசிசிஐ யோசித்து வருகிறது. ஆனால் இதற்குமேல் வெளிநாட்டு வீர்ரகள் நிச்சியமாக இந்திய வரமாட்டார்கள். வேறு வழி இல்லாமல் வெளிநாட்டில் தான் மீதமுள்ள ஐபிஎல் 2021கான போட்டிகள் நடத்தி முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிலும் இரண்டு வாய்ப்பு தான் உள்ளது ஒன்று ஐக்கிய அரபு நாடு மற்றும் இங்கிலாந்து தான். ஆனால் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு நாட்டில் வெய்யில் அதிகமாக இருப்பதால் நிச்சியமாக அங்கு விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று வீரர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து நாட்டில் நடத்தலாம் என்றாலும், அங்கு உள்ள நேரமும் இந்திய நேரமும் சரியாய் இருக்காது. மக்கள் இரவு நேரத்தில் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை பார்க்க நினைப்பார்கள். அதனால் என்ன செய்யப்போகிறது பிசிசிஐ என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை செப்டம்பர் மாதத்துக்குள் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறைந்து விட்டதால் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியும், மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டியில் இந்தியாவில் தான் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button