விளையாட்டு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முன்னால் இலங்கை வீரர்…..!!! மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கும் நம்ம குமார் சங்கக்கார!…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முன்னால் இலங்கை வீரர்…..!!! மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கும் நம்ம குமார் சங்கக்கார!…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

T20 கிரிக்கெட் தொடரில் ……

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார வர்ணனையாளராக செயல்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை இணைந்து தி ஹண்ரட் என்னும் புதிய வடிவிலான கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் நடைபெறவிருந்த இத்தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி முதல் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அதுமாத்திரமின்றி, ஆண்களைப் போல பெண்கள் பங்கேற்கும் தி ஹண்ரட் தொடரும் நடைபெறவுள்ளது.

8 அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் அணிக்கு மொத்தம் 100 பந்துகள் வீசப்படும். இதில் மொத்தம் 68 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 34 போட்டிகள் ஆண்களுக்காகவும், 34 போட்டிகள் பெண்களுக்காகவும் நடைபெறவுள்ளன.

இத்தொடரினை ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவுள்ளதுடன், இதில் வர்ணனையாளர்களாக யார் யார் செயல்பட உள்ளனர் என்பது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்ணனையாளர்கள் குழுவில் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, 2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் வர்ணனையாளராக சங்கக்கார செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான அன்ட்ரூ பிளிண்டாப், கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட், டேரன் சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் வர்ணனையாளர்களாக இணைந்து கொள்ளவுள்ளளனர்.

அதேபோல, பாகிஸ்தானின் வசீம் அக்ரம், இந்தியாவின் தினேஷ் கார்த்திக், அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் மெல் ஜோன்ஸ், இவர்களுடன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிரந்தர வர்ணனையாளர்களான நாசர் ஹுசைன், எபோனி ரெய்ன்போர்ட், ரொப் கீ, டேவிட் லோய்ட், மைக்கல் ஆர்த்தர்டன், மார்க் பௌச்சர் ஆகியோரும் உள்ளனர்.

Sri Lanka’s batsman Kumar Sangakkara plays a shot during their first One Day International cricket match against South Africa in Colombo, Sri Lanka, Saturday, July 20, 2013. (AP Photo/Eranga Jayawardena)
இதேவேளை, அங்குரார்ப்பண தி ஹண்ரட் தொடரில் இலங்கை முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, சொதர்ன் பிரேவ் அணியின் பயிற்சியாளராக செயற்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button