விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் வயதை மீறிய பேட்டிங்! 45 வயதில் 190 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் – வீடியோ

கிரிக்கெட் வரலாற்றில் வயதை மீறிய பேட்டிங்! 45 வயதில் 190 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் – வீடியோ

வயதை மீறிய பேட்டிங்! 45 வயதில் 190 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் – வீடியோ45 வயதில் சாதனை படைத்த டேரன் ஸ்டீவன்ஸ்.
இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியான கென்ட் அணியைச் சேர்ந்த 45 வயது ஆல்ரவுண்டர் டேரன் ஸ்டீவன்ஸ் 149 பந்துகளில் 190 ரன்களை விளாசித்தள்ளினார்.

இதில் 15 பவுண்டரிகள் 15 சிக்சர்களை புரட்டி எடுத்தார் டேரன் ஸ்டீவன்ஸ்.

கிளாமர்கன் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் தனது வயதையும் மறந்து விளாசிய டேரன் ஸ்டீவன்ஸ் தன் அணியை 128/8 என்ற நிலையிலிருந்து 307 ரன்களுக்குக் கொண்டு சென்றார். இதில் 166 ரன்களை கூட்டணி சேர்ந்து எடுத்தாலும் இவர் மட்டுமே 160 ரன்களை இதில் அடித்தது கவுண்ட்டி கிரிக்கெட் வரலாற்றுச் சாதனையாகும்.

மிகுவெல் கமின்ஸ் என்ற வீரருடன் இந்த கூட்டணியை அவர் அமைத்தார். கமின்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்தார். இதோடு மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டரான டேரன் ஸ்டீவன்ஸ் தனது ஆல்ரவுண்ட் திறமையை நிரூபிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் விக்கெட்டையும் அருமையான பந்தில் வீழ்த்தினார்.

முன்னதாக டாஸ் வென்ற கிளாமர்கன் அணி முதலில் கெண்ட் அணியை பேட் செய்ய அழைத்தது. தொடக்க வீரர்கள் 60 ரன்களைச் சேர்த்த பிறகு 32 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது கெண்ட்.

நம்பர் 7 இடத்தில் இறங்கினார் 45 வயது டேரன் ஸ்டீவன்ஸ், 128/8 என்ற நிலையில் ஸ்டீவன்ஸ் பேட்டிங் ஷோதான், கிளாமர்கன் பந்து வீச்சை மைதானத்துக்குள்ளும் வேளியேயும் சுழற்றி சுழற்றி அடித்தார். 190 ரன்களில் லபுஷேன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதற்குப் பழிதீர்க்கும் விதமாக லபுஷேனை பேட்டிங்கில் 11 ரன்களில் காலி செய்தார் ஸ்டீவன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button