விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரனின் 800 விக்கெட்டுகள் சாதனையை தகர்க்க இந்திய பவுலரான அஸ்வின் வாய்ப்பு இருக்கு – பிராட் ஹாக் ஓபன் டாக்

அஸ்வின் வாய்ப்பு இருக்கு………..

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 1992-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2010ஆம் ஆண்டு வரை விளையாடி 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் இவரது சாதனையை தற்போது உள்ள வீரர்களில் எவராலும் எட்ட முடியாது என்ற கருத்து நிலவி வருகிறது. ஏனெனில் நவீன கால கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளை விட டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருப்பதால் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட அதிகளவு முனைப்பு காட்டுவதில்லை.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனின் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினால் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அஸ்வின் அதிவேகமாக 200, 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை எட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

இதுவரை 77 போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் 401 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஸ்வின் குறித்து பிராட் ஹாக் கூறுகையில் : அஸ்வினுக்கு தற்போது 34 வயது தான் ஆகிறது அவர் 42 வயதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார் என்று நினைக்கிறேன்.

அவரது பேட்டியில் தரம் குறைந்தாலும் பவுலிங்கில் எந்தவித குறைபாடும் இல்லை. கண்டிப்பாக அவர் 600க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்துவார். மேலும் முரளிதரன் 800 விக்கெட்டுகள் சாதனையை கூட அவரால் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என பிராட் ஹாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button