விளையாட்டு

இந்த விருதுக்கு நடராஜன் பொருத்தமானவர்… தமிழனை பெருமைப்படுத்திய ஹார்திக்! குவியும் வாழ்த்துக்கள்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக வீசிய தங்கராசு நடராஜனை ஹார்திக் பாண்ட்யா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சிட்னியில் இன்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாது டி20 போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டதால், இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் விளையாடியது.

ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சை அவுஸ்திரேலியா அணியினர் வெளுத்து வாங்கினர். இதனால் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 194 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணியினரை அனைத்து பந்து வீச்சையும் வெளுத்து வாங்கிய அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பந்து வீச்சில் தடுமாறியதுடன், அடித்து ஆட முற்படவில்லை.

ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்த போதும், நடராஜன் அற்புதமாக பந்து வீசி 4 ஓவர்களுக்கு 20 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஹார்திக் பாண்ட்யா, கடைசி 5 ஓவர்களில் இலக்கு 80, 90,100 ஓட்டங்களாக இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது ஒவ்வொருக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். என்னைப் பொருத்தவரை இன்றைய ஆட்டத்தில் நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். அவரின் துல்லியமான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ஓட்டங்கள் குறைந்தது

இந்த விருது நடராஜனுக்கு பொருத்தமானதாக இருக்கும், ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்த போதும், அவர் சிறப்பாக பந்து வீசியதாக புகழ்ந்து தள்ளினார்.

இதைத் தொடர்ந்து நடராஜனுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button